விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9 வது சீசன் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் இரண்டு மாதங்களை பூர்த்தி செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே நான்கு பேர் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக உள்ளே நுழைந்த நிலையில் மீண்டும் ஆதிரையும் நுழைந்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக பிக் பாஸில் எந்த பிரச்சினையும் இல்லாமல் ஒளிபரப்பாகி வந்தது. ஆனால் ஆதிரை உள்ளே வந்ததும் தன் வேலையை காண்பிக்க ஆரம்பித்துவிட்டார். இதனால் சக போட்டியாளர்களுக்கு இடையே சண்டைகளை மூட்டிவிட்ட நிலையில், ஆரம்பத்தில் இருந்தது போலவே பிக் பாஸில் சண்டைகளும் சர்ச்சைகளும் உருவெடுத்துள்ளன.
இதற்கு இடையில் கம்ருதீன், பார்வதி, அரோரா ஒரு பக்கமும், FJ வியானா இன்னொரு பக்கமும் நிற்க அவர்களுக்கு இடையே மோதல்கள் அதிகரித்து வருகின்றன. இதுவரை இடம் பெற்ற பிக் பாஸ் சீசன்களை போல் அல்லாமல், இந்த சீசன் மட்டுமே பிக்பாஸையே வெறுப்பேற்றி திட்டும் வாங்கினர்.

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் அரோராவின் அட்டூழியங்கள் எல்லை மீறியதால் அவரை உடனடியாக எலிமினேட் செய்யுமாறு நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அரோரா இன்ஸ்டாகிராம் பிரபலமாக காணப்படுவதோடு அவருக்கென்று subscribers அதிகமாக உள்ளனர். தற்போது நேஷனல் சேனலில் இருக்கும் அரோரா, அங்கு முகம் சுளிக்கும் வைக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவதாக நெட்டிசன்கள் வெறுப்பை காட்டி வந்தனர்.
இவ்வாறான நிலையில், பிக் பாஸில் அனைத்து இடங்களிலும் கேமராக்கள் இருப்பது தெரிந்தும், தனது உள்ளாடைகளை பொது வெளியில் சரி செய்துள்ளார் அரோரா. இது தனது subscribers ஐ ஈர்ப்பதற்காகவா? என கேள்வி எழுப்பிய நெட்டிசன்கள் அவரை எலிமினேட் செய்ய வேண்டும் என்று வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.
Listen News!