• May 09 2024

விக்ரம் படத்தில் நடித்துள்ள இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.. கசிந்த தகவல் இதோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

மாநகரம், கைதி,மாஸ்டர் போன்ற ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். அந்தவகையில் தற்போது உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் விக்ரம் படத்தை தயாரித்துள்ளார்.

இப்படத்தில் பகத் பாசில், சூர்யா ,விஜய் சேதுபதி,காளிதாஸ் ஜெயராம், நரேன், அர்ஜுன்தாஸ் என பல முக்கிய நடிகர்கள் நடித்து உள்ளது பெரும் ஆராவாரத்தை ஏற்படுத்தி உள்ளது.அனிருத் இசையில், கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவில் பிரம்மாண்டமாக தயாராகியுள்ள இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் கமல் ஹாசன் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகலாவியரீதியில் வருகின்ற ஜூன் மாதம் 3ஆம் திகதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. மேலும் இப் படத்தின் ரிலீஸுக்கு இன்னும் ஒருவாரமே எஞ்சியுள்ள நிலையில் படத்துக்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டுள்ளது.

இந்நிலையில், ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் இப்படத்தில் கேமியோ ரோலில் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ளாராம்.

ஏற்கனவே இதற்குமுன் வெளிவந்த மாஸ்டர் படத்தில் கேமியோ ரோலில் இயக்குநர் லோகேஷ், விக்ரம் படத்திலும் நடித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அப்படி எந்த காட்சியில் லோகேஷ் நடித்துள்ளார் என்று விக்ரம் படத்தை பார்த்து தெரிந்துகொள்வோம்.

Advertisement

Advertisement

Advertisement