• May 09 2024

மீண்டும் இயக்குநராகும் நடிகர் தனுஷ்…பைனான்ஷியர் இவர் தானா..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிப்பின் ராட்சசன் என்று அழைக்கப்படுபவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய மாறன் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இது தவிர தற்பொழுது நானே வருவேன், திருச்சிற்றம்பலம், வாத்தி ஆகிய படங்களில் நடித்து வருகின்றார்.

மேலும் இவர் பா. பாண்டி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் நடிகர் தனுஷ்.

இப்படத்தை தொடர்ந்து தனுஷ் இயக்கவிருந்த புதிய படம் ஒன்று தீடீரென ட்ரோப் ஆகிவிட்டது.

இதன்பின் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த தனுஷ் தற்போது மீண்டும் இயக்குநராகவுள்ளார் என்று தகவல் கசிந்துள்ளது.

இந்நிலையில் தயாரிப்பாளரும், பைனான்ஷியருமான அன்புச்செழியன் தயாரிப்பில் தனுஷ் புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு இந்த படத்தை தனுஷே இயக்க இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். விரைவில் படக்குழுவிடம் இருந்து இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement