• May 20 2024

விஜய் குறித்து எழும் விமர்சனங்களுக்கு விக்ரம் பட பாணியில் பதில் சொன்ன இயக்குநர்-லைக் பண்ணிய லோகேஷ் கனகராஜ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உள்ள மாஸ் நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் நடிகர் விஜய். இவரது நடிப்பில் வெளியாகிய பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றிருக்கின்றன. இதனால் இவருடைய படங்களுக்கான எதிர்பார்ப்பானது ரசிகர்களிடையே அதிகளவு காணப்படுகின்றது.

அந்த வகையில் விஜய் நடிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் பீஸ்ட், பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியான பீஸ்ட் திரைப்படம் கடும் விமர்சனங்களையே அதிகம் பெற்றது.

அதுமட்டுமின்றி சமீபத்தில் ஒருவர் பீஸ்ட் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை பதிவிட்டு விமர்சித்து இருந்தார். அதற்கு பல வட இந்திய பார்வையாளர்கள் பீஸ்ட் திரைப்படம் குறித்து தொடர் விமர்சனங்களை வைத்து வந்தனர்.

இதனால் விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி கோலிவுட் வட்டாரமே அப்செட் ஆனது, மேலும் பிரபல இயக்குநரான ரத்னா குமார் விஜய்யின் டயலாக் புகைப்படத்தை பதிவிட்டு, விக்ரம் பட பாணியில் "பாத்துக்கலாம்" என பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில் தற்போது அந்த பதிவை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் லைக் செய்திருக்கிறார், இதனால் ரசிகர்கள் தளபதி 67 படத்திற்கு இப்போதே உற்சாகமாகி இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement