• May 09 2024

என்னுடைய நூறு சதவீத உழைப்பையும் போடுவேன்- அஜித் 62 படம் குறித்து பேசிய இயக்குநர் விக்னேஷ் சிவன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகரான அஜித் தற்பொழுது தனது 61 வது படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தை வலிமை திரைப்படத்தை இயக்கிய எச். வினோத் தான் இயக்கவுள்ளதோடு போனிகபூர் இப்படத்தை தயாரிக்கின்றார்.

இந்தப்படத்தில் நடித்தவுடன் தனது 62 வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதோடு லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. மேலும் இப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.

மேலும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை போல அஜித் படத்தை சொதப்பி விடக் கூடாதே என்ற பயத்தில் உள்ளார் விக்னேஷ் சிவன். ஏனென்றால் அஜித் ரசிகர்கள் இந்த படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு வைத்துள்ளனர். இதனால் விக்னேஷ் சிவன் இந்த படத்தில் என்னுடைய நூறு சதவீத உழைப்பையும் போடுவேன்.

அஜித் சாரின் ரசிகர்கள் அவர்மீது மிகுந்த அன்பு வைத்து உள்ளனர். அவர்களை திருப்திபடுத்தும் வகையில் நான் இப்படத்தை உருவாக்க வேண்டும் என்ற பொறுப்பு என்னிடத்தில் உள்ளது. மேலும் அஜித் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அனைத்தும் இந்த படத்தில் இருக்கும்.

படத்தின் ஸ்கிரிப்ட்டை முடித்த பிறகு நடிகர், நடிகைகள் தேர்வு செய்து ஒரு நல்ல டீமை அமைத்து முழு கவனம் செலுத்தும் போது ஒரு நல்ல படத்தைப் கொடுக்க முடியும் என நம்புகிறேன் என விக்னேஷ் சிவன் உறுதியளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement