• May 04 2024

விஜய் கெட்ட வார்த்தை பேசியிருக்காரே? இப்ப என்னடா சொல்லுறீங்க?- லியோ ட்ரெய்லருக்கு எதிராக பஞ்சாயத்தை ஆரம்பித்த ப்ளூ சட்டை மாறன்

stella / 6 months ago

Advertisement

Listen News!


தளபதி விஜய் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தாறுமாறு படமாக லியோ படம் உருவாகி இருப்பது அதன் டிரெய்லரை பார்த்தாலே தெரிகிறது. லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா வைத்து ட்ரெய்லரையும் வெளியிட்டு இருந்தால் இந்நேரம் வேறலெவல் ஹைப்பாக இருந்திருக்கும். 

ஆனால், இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை லியோ ட்ரெய்லர் ரிலீஸுக்கு பிறகு அந்த படத்தின் ஹைப் இமயமலை அளவுக்கு எழுந்து நிற்கும் என்பது தெளிவாக தெரிகிறது.அதேசமயம் ட்ரெய்லரை பார்க்கும்போது படத்தில் விஜய் டபுள் ஆக்‌ஷனா இல்லை லியோ தாஸ்தான் பார்த்திபனாக காஷ்மீரில் வாழ்கிறாரா என்ற கேள்வி எழுகிறது.


எனவே கண்டிப்பாக படத்தில் பயங்கர ட்விஸ்ட் இருப்பது உ றுதியாகியிருக்கிறது.ட்ரெய்லருக்கு ரசிகர்கள் நல்ல ரெஸ்போன்ஸ் கொடுத்து வருகின்றனர்.இந்நிலையில் லியோ ட்ரெய்லரில் விஜய் கெட்ட வார்த்தை பேசியதை வைத்து  ப்ளூ சட்டை மாறன் விமர்சித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது,

அவர் தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவில், "லியோ ட்ரைலர். 'எவனோ ஒரு தே**யா பையன் என்னை மாதிரி'.விஜய் பேசும் வசனம். Censor certificate fake னு சொன்ன டுபாக்கூர்ஸ். ட்ரைலர்லயே இந்த கெட்ட வார்த்தை வருது. அப்ப படத்துல எத்தனை இருக்கோ. இப்ப என்னடா சொல்லுறீங்க? இதுவும் ஃபேக்கா? என கேள்வி எழுப்பியிருக்கிறார். 


அதேபோல் மற்றொரு பதிவில், 'அது ஃபேக் சென்சார் சர்டிஃபிகேட். இது ஃபேக் ட்ரைலர்' 2K Boomers கதறல்" என பதிவிட்டிருக்கிறார். அதுமட்டுமின்றி லியோ ட்ரைலரில் தே**யா பையன் என கெட்டவார்த்தை பேசும் விஜய். மாணவர்கள், இளைஞர்களுக்கு தவறான உதாரணமாக இருக்க காரணம்..லோகேஷ் கனகராஜா, விஜய்யா இல்லை இருவருமா என போல் ஒன்றையும் போட்டிருக்கிறார். லியோ ட்ரெய்லர் வெளியாகி ஒரு மணி நேரம்கூட ஆகாத சூழலில் ப்ளூ சட்டை மாறன் பஞ்சாயத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement