• May 18 2024

தலைவர் 170 படத்திற்கு எதிராக கிளம்பிய புதிய சர்ச்சை- நேரடியாக மன்னிப்புக் கேட்கனுமா?- குழப்பத்தில் இயக்குநர்

stella / 7 months ago

Advertisement

Listen News!

ஜெயிலர் மூலம் வெறித்தனமான கம்பேக் கொடுத்த சூப்பர் ஸ்டார், அடுத்து தலைவர் 170 படப்பிடிப்பில் பிஸியாகிவிட்டார். லைகா தயாரிப்பில் லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் நடித்த சூப்பர் ஸ்டார், தலைவர் 170-ல் ஹீரோவாக நடிக்கவுள்ளார். தசெ ஞானவேல் இயக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

மேலும் தலைவர் 170 படத்தில், அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, துஷாரா விஜயன், மற்றும் ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கிய ஒரே நாளில் தற்பொழுது புதிய பிரச்சினை ஒன்று கிளம்பியுள்ளது. அதாவது இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் படத்தில் வன்னியர் சமூகத்தை அவதூறாக சித்தரித்து காட்டியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவே, இந்த படத்தை புறக்கணிக்க உள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். 


இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, "திரைப்பட இயக்குநர் த.செ.ஞானவேல், வன்னியர் சமூகத்தை சிறுமைப்படுத்தும் விதமாகவும், இழிவாகவும் காட்டியதுடன், நமது மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் மாவீரன் அவர்களையும் எதிர்மறையான கதாபாத்திரமாக வடிவமைத்ததை கண்டித்து, நாம் அனைவரும் எதிர்ப்பை பதிவு செய்திருந்தோம்.  


ஒட்டுமொத்த வன்னியர் சமூகமும், இதர சகோதர சமுதாயங்களும் எதிர்ப்பு தெரிவித்தும், இதுவரை தான் செய்தது தவறு என நேரடியாக மன்னிப்பு கூட கேட்காதவர் த.செ.ஞானவேல். இத்தகைய போக்கை கொண்டிருக்கும், ஞானவேல் பங்களிப்பில் உருவாகும் எந்த திரைப்படத்தையும் வன்னியர் சமூக மக்கள் ஆதரிக்காமல், ஒற்றுமையாக புறக்கணிக்க வேண்டும் எனவும், அதன்மூலம் நமது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் எனவும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்" என மாநில வன்னியர் சங்க செயலாளர் வைத்தி தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement