• May 18 2024

லியோ திரைப்படத்தில் நடிகை ப்ரியா ஆனந்த் இந்த காரெக்டரில் தான் நடிக்கின்றாரா?- அதை மறந்திட்டோமே

stella / 7 months ago

Advertisement

Listen News!

கோலிவுட்டில் இப்போது மோஸ்ட் வாண்டட் படமாக இருக்கும் படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், சஞ்சய் தத், த்ரிஷா, அர்ஜுன், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், மிஷ்கின், மாத்யூ தாமஸ், ப்ரியா ஆனந்த், அனுராக் காஷ்யப், சாண்டி மாஸ்டர் என பெரிய நட்சத்திர பட்டாளமே களமிறங்கியிருக்கிறது. 

இந்தத் திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.யு/ஏ: படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து சென்சாருக்கு சென்று யு/ஏ சர்ட்டிஃபிகேட்டை படம் பெற்றிருக்கிறது. படத்தில் ஏகப்பட்ட கெட்டவார்த்தைகள் இருப்பதாக கூறப்படுகிறது.


மேலும் படத்தின் ட்ரெய்லர் இன்றைய தினம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் ட்ரெய்லர் வெளியாகிய 5 நிமிடத்தில் 5 மில்லியன் பார்வையாளர்களையும் பெற்றுள்ளது.


இந்நிலையில் லியோ ட்ரைலரில் விஜய் குடையை வைத்து முகத்தை மறைப்பது போன்ற காட்சி இடம் பெற்று உள்ளது. அதில் பத்திரிகையாளர்கள் பக்கத்தில் நடிகை பிரியா ஆனந்த் இருந்துள்ளார். லியோ படத்தில் பிரியா ஆனந்த்பத்திரிகையாளராக நடித்திருக்கலாம் என்று ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement