• Jul 15 2026

விஜய் ஆண்டனி - சசி கூட்டணியால் சாதிக்க முடியவில்லையா? 'நூறு சாமி' வசூலில் திடீர் வீழ்ச்சி

shali / 3 weeks ago

Advertisement

Listen News!

விஜய் ஆண்டனி நடிப்பில் இயக்குநர் சசி இயக்கியுள்ள 'நூறு சாமி' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சுவாசிகா, லிஜோமோல் ஜோஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த திரைப்படம், அதன் வித்தியாசமான கதைக்களம் மற்றும் உணர்வுபூர்வமான திரைக்கதையால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


படம் வெளியான முதல் நாளிலிருந்தே நல்ல விமர்சனங்களைப் பெற்றது. குறிப்பாக விஜய் ஆண்டனியின் நடிப்பு மற்றும் சசியின் இயக்கம் பாராட்டுகளை குவித்தன. இதன் காரணமாக வசூலிலும் படம் நல்ல முன்னேற்றத்தை பதிவு செய்து வருகிறது.

சமீபத்தில் வெளியான தகவலின்படி, 'நூறு சாமி' திரைப்படம் முதல் மூன்று நாட்களில் சுமார் ரூ.3.50 கோடி வசூல் செய்திருந்தது. ஆனால் நான்காவது நாளான நேற்று வசூலில் சிறிய சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. Sacnilk வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், நேற்று மட்டும் படம் ரூ.64 லட்சம் வசூல் செய்துள்ளது எனக் கூறப்படுகிறது. 

இதனால் படத்தின் மொத்த வசூல் தற்போது ரூ.4 கோடியை தாண்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் வரும் வார இறுதியில் மீண்டும் வசூல் அதிகரிக்கும் என திரையுலக வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன. நல்ல விமர்சனங்களும் ரசிகர்களின் ஆதரவும் தொடரும் நிலையில், 'நூறு சாமி' இனிவரும் நாட்களில் வசூலில் மேலும் சாதனை படைக்கும் என நம்பப்படுகிறது.


Advertisement

Advertisement