• May 19 2024

தனது பூர்வீக ஊரில் பெற்றோருக்கு சிலை வைத்த ரஜினிகாந்த்- முக்கிய பிரச்சினையையும் தீர்த்து வைத்தாரா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல் ஒரு கண்டக்டராக இருந்து, பின்னர் முறையாக நடிப்பு குறித்து பயின்று  நடிகராக மாறியவர். இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் என்றாலும், இவருடைய பூர்வீகம் என்னவோ கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வேப்பனபள்ளி என்கிற இடம் தான்


அங்குதான் அவருடைய பெற்றோர் பிறந்தது  மற்றும் அவர்களின் முன்னோர்கள் வாழ்ந்து எல்லாம். இப்போதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் உறவினர்கள் பலர் அப்பகுதியில், வாழ்ந்து வருகின்றனர். நெருங்கிய உறவினர்களின் நல்லது கெட்டதுக்கு அடிக்கடி ரஜினிகாந்தின் அண்ணன் சென்று வருவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.


ஆனால் ரஜினிகாந்த் இதுவரை ஒரு முறை கூட தன்னுடைய பூர்வீக கிராமமான வேப்பனபள்ளி பகுதிக்கு சென்றதில்லை. இந்நிலையில், தன்னுடைய பெற்றோர் பிறந்து வளர்ந்த பூர்வீக ஊரில் அவர்களுக்கு சிலை வைக்க வேண்டும் என ரஜினிகாந்த் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இரண்டு ஏக்கர் அளவில் நிலம் ஒன்றை வாங்கி போட்டார்.


அங்கு தற்போது, தன்னுடைய பெற்றோருக்கு ரஜினிகாந்த் சிலை வைத்துள்ளார். அது மட்டும் இன்றி ஊர்மக்கள் தாகம் தீர்க்கும் வகையில், தண்ணீர் டேங்க் ஒன்றையும் அமைத்துக் கொடுத்துள்ளார். அதேபோல் கால்நடைகள் மற்றும் வழியில் செல்பவர்கள் தாகம் தீர்க்கும் வகையிலும், அங்கு தண்ணீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது.


ரஜினியின் பூர்வீக ஊரான வேப்பனப்பள்ளி பகுதியில், தண்ணீர் பிரச்சனை அதிகமாக உள்ளது. அதுவும் தற்போது கோடை காலம் என்பதால் பல குடும்பங்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வரும் நிலையில், பெற்றோருக்கு சிலை வைத்தது மட்டுமின்றி மக்களின் தண்ணீர் பிரச்சனையை தீர்க்கும் விதமாக ரஜினிகாந்த், தண்ணீர் டேங்க்யை  கட்டி  கொடுத்து தாகம் தீர்க்கும் வகையில் சில ஏற்பாடுகளை செய்துள்ளதற்கு, அந்த ஊர் மக்கள் தங்களுடைய நன்றிகளை தெரிவித்துள்ளனர். மேலும் இதுவரை ரஜினிகாந்த் தங்களுடைய ஊருக்கு வந்ததில்லை என்கிற குறை ஒன்று மட்டுமே தங்கள் மனதில் உள்ளதாகவும், அவர் விரைவில் தங்களைப் பார்க்க வர வேண்டும் என கோரிக்கை ஒன்றியும் வைத்துள்ளனர்.


Advertisement

Advertisement