• Feb 03 2026

சமூக அரசியல் பேச வந்த படம் எங்கே? – பராசக்தியை விமர்சித்த ப்ளூ சட்டை மாறன்

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சமூக கருத்துகளை மையமாக வைத்து படங்களை இயக்கும் இயக்குநர்களில் முக்கியமானவர் சுதா கொங்கரா. அவரது இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள புதிய படம் தான் ‘பராசக்தி’. ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தை டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ளார்.

ஹிந்தி திணிப்பை எதிர்த்து தமிழ்நாட்டில் கல்லூரி மாணவர்கள் நடத்திய போராட்டத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம், நேற்று திரையரங்குகளில் வெளியானது.


படம் வெளியாகியுள்ள நிலையில், பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சன வீடியோவை வெளியிட்டுள்ளார். எப்போதும் போலவே எந்த வித சமரசமும் இல்லாமல் அவர் தனது கருத்துகளை முன்வைத்துள்ளார். தற்போது அந்த விமர்சன வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில், இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக இருந்ததாக கூறியுள்ளார். அதாவது, “மொழிப் போரில் உயிர்நீத்த சின்னசாமி போன்ற தியாகிகளை நமது கண்கள் முன் நிறுத்துவார்கள் என எதிர்பார்த்தோம். ஹிந்தியை இன்னும் நாம் ஏன் எதிர்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதற்கு வலுவான பதிலாக இந்த படம் இருக்கும் என்று நினைத்து தான் திரையரங்கிற்கு சென்றோம்.” என அவர் கூறியுள்ளார்.

ஆனால் படம் பார்த்த பின்பு அந்த எதிர்பார்ப்பு முழுமையாக ஏமாற்றமாக மாறியதாக அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக, “படத்தை பார்த்தால், இவர்களிடம் போய் எதிர்பார்த்துவிட்டோமே என்று தோன்றுகிறது. இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும் என்ற அளவுக்கு ஆக்கிவிட்டார்கள்.” என அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஹிந்தி திணிப்பு போன்ற தீவிரமான சமூக பிரச்சினையை மையமாக வைத்து படம் எடுக்கும்போது, அதற்கான ஆழமும் நேர்மையும் தேவை என்று ப்ளூ சட்டை மாறன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த கதையை 40 வருட வரலாறாக விரிவாக சொல்லலாம் என்றும், அதை பத்து பாகங்களாக கூட எடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால்,“அத்தனை பெரிய விஷயத்தை இரண்டரை மணி நேரத்துக்குள் சொல்கிறோம் என்று சொல்லி, முக்கியமான விஷயங்களை மேலோட்டமாக கடந்து விட்டார்கள்.” என விமர்சித்துள்ளார்.

Advertisement

Advertisement