• Mar 16 2026

‘ரெட்ட தல’ ரசிகர்களை திருப்திப்படுத்தியதா? அருண் விஜயின் இரட்டை வேடம் எப்படி? ரிவ்யூ

shali / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள புதிய படங்களில் ஒன்று ‘ரெட்ட தல’. இயக்குநர் கிரிஷ் தமிழ்குமரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகர் அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். ஆக்ஷன், திரில்லர் மற்றும் உணர்ச்சி கலந்த கதைக்களம் கொண்ட இப்படம், வெளியீட்டுக்கு முன்பே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.


இந்நிலையில், படம் இன்று வெளியாகியுள்ளதால், முதல் நாள் முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துகளை சமூக ஊடகங்களிலும் திரையரங்குகள் முன்பும் பகிர்ந்து வருகின்றனர். அந்த விமர்சனங்கள் தற்போது இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.

‘ரெட்ட தல’ திரைப்படம், அருண் விஜயின் நடிப்புத் திறமையை வேறுபட்ட கோணத்தில் காட்டும் படமாக உருவாகியுள்ளது. இரட்டை வேடம் என்பதால், கதையின் திரைக்கதை மற்றும் கதாபாத்திர வடிவமைப்பு முக்கியமாக பார்க்கப்பட்டது.

இந்நிலையில் படத்தினைப் பார்த்த ரசிகர்கள், “படத்தின் திரைக்கதை தான் மேட்டரே. முதல் பாதி கொஞ்சம் ஸ்லோவாக போகுது. ஆனாலும் அது கதைக்கு செட் ஆகுது.” என்று தெரிவித்துள்ளார்கள்.


மேலும் ஒருவர் “இரண்டாம் பாதி திரைக்கதையை விறுவிறுப்பாக வைத்து ரசிகர்களை திருப்தியாக வெளியே அனுப்பி இருக்காங்க” என்று தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.

அதுமட்டுமல்லாது, ஆக்ஷன் காட்சிகள், கதையின் திருப்பங்கள் மற்றும் அருண் விஜயின் நடிப்பு, இரண்டாம் பாதியில் படத்திற்கு வேகத்தை கூட்டியுள்ளதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறாக பல ரசிகர்கள் படத்தின் திரைக்கதையை பாசிட்டிவாக பாராட்டியுள்ளனர். இதனால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

Advertisement

Advertisement