• May 10 2024

ஜூலையில் தனுஷின் இரண்டு படங்கள்… வெளியான புதிய அப்டேட்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

துள்ளுவதோ இளமை எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிய தனுஷ் தற்போது பாலிவுட் ஹாலிவுட் என கலக்கி வருகின்றார்.இவர் ஒரு நடிகர் மட்டுமல்லாது இயக்குநர் ,தயாரிப்பாளர், பாடகர் ,பாடலாசிரியர் என பன்முகம் கொண்டவர்.

முதல் படத்தில் கடுமையான விமர்சனங்களை சந்தித்த தனுஷ் அதைப்பற்றி கவலைப்படாது நடிப்பில் மட்டுமே ஆர்வம் காட்டி வந்தார். எனினும் அதன் பலனாக காதல் கொண்டேன், திருடா திருடி, தேவதையை கண்டேன், பொல்லாதவன், படிக்காதவன், ஆடுகளம் என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நடிகராக உச்சத்தை தொட்டுள்ளார்.

தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படம் உருவாக இருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது.

மேலும் இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர், நித்யா மேனன் மற்றும் ராஷி கண்ணா ஆகிய மூன்று நாயகிகள் நடிக்கின்றனர். ஏற்கனவே சென்னையிலும் பாண்டிச்சேரியிலும் என அடுத்தடுத்து நடந்த படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு நிறைவுற்றது.

இதையடுத்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்துவரும் நிலையில் படம் ஜூலை 1 ஆம் தேதி ரிலீஸாகும் என படத்தை வாங்கியுள்ள உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஜூலை 22 ஆம் தேதி தனுஷ் நடித்துள்ள முதல் ஹாலிவுட் படமான ‘தி க்ரே மேன்’ திரைப்படமும் நெட்பிளிக்ஸில் நேரடியாக ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

https://www.youtube.com/embed/VD6qNCIqHeA

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement