• May 09 2024

விமான நிலையம் வந்த 'பீஸ்ட்' பூஜா ஹெக்டேவுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரையுலகின் சென்சேஷன் நடிகைகளில் ஒருவர் பூஜா ஹெக்டே. இவர் தமிழில் ஜுவா நடிப்பில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானவர்.

நடிக்க துவங்கிய காலகட்டத்தில் பெரிதும் வாய்ப்புகள் இல்லாமல் தடுமாறி வந்த இவர், தற்போது நடிகர்கள் விஜய், பிரபாஸ் என முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து முடித்துள்ளார்.

இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த திரைப்படம் தான் பீஸ்ட்.ஆனால் இந்த படமும் மோசமான விமர்சனங்களை சந்தித்தது. சமீபத்தில் இந்த படம் ஓடிடியில் ரிலீஸ் ஆன நிலையில் கிளைமாக்ஸ் காட்சியில் விஜய் ஜெட் ஓட்டும் காட்சிகளை கலாய்த்து வருகின்றனர்.

மேலும் இதெல்லாம் ஒருபுறம் இருக்க தற்போது பூஜா ஹெக்டே கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்க இருக்கின்றார். அங்கு செல்வதற்காக அவர் மும்பை விமான நிலையம் வந்த போது அவருக்கு ஒரு பெரிய சர்ப்ரைஸ் காத்திருந்தது.

அவர் காரை விட்டு இறங்கியதும் அங்கு ரசிகர்கள் கூட்டமாக நின்று அவரை வாழ்த்தி பேனர் பிடித்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் அதை பார்த்து அவருக்கு இன்ப அதிர்ச்சி தான்.

வீடியோ இதோ

https://www.youtube.com/embed/VD6qNCIqHeA

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement