• May 19 2024

தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் இணைந்த முக்கிய இளம் நடிகை

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் கேப்டன் மில்லர்.இது இவருடைய மூன்றாவது படமாகும். இப்படத்தில் கதாநாயகனாக நடிகர் தனுஷ் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

இப்படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பதோடு படத்திற்கு  ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படம் சம்மந்தமாக மோஷன் போஸ்டர் மற்றும் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.


இப்படத்தில் இவருடன் சந்தீப் கிஷன் மற்றும் பிரியங்கா மோகன் ஆகியோர் நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.இந்நிலையில் இப்போது நிவேதிதா சதீஷ் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் சில்லு கருப்பட்டி மற்றும் சுழல் வெப் தொடர் ஆகியவற்றில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இது தவிர தனுஷ் நடிப்பில் வாத்தி என்னும திரைப்படம் உருவாகி வருகின்றது. இப்படம் விரைவில் வெளியாகக் காத்திருக்கின்றது என்பதும் முக்கியமாகும்.

Advertisement

Advertisement