• May 04 2024

'நானே வருவேன் படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்ட தனுஷ்- செம குஷியில் துள்ளிக் குதிக்கும் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும்  'நானே வருவேன் படத்தின் டீசர் வரும் 15ம் திகதி வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் நானே வருவேன்'. தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் இப்படத்தினை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கின்றார் . இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.


அத்தோடு இப்படத்தில் இயக்குநர் செல்வராகவனும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார்.மேலும் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ஸ்வீடன் நாட்டு நடிகை எல்லி அவ்ரம் மற்றும் இந்துஜா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 


சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடல் 'வீரா சூரா' லிரிக் வீடியோ வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்த நிலையில் இப்படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன் படி வருகிற 15-ஆம் தேதி இப்படத்தின் டீசர் வெளியாகவுள்ளது. இதனை தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து படத்தின் புதிய போஸ்டரை பகிர்ந்துள்ளார். 

ஏற்கனவே இம்மாதம் இப்படம் வெளியாகும் என அறிவிப்பு வெளியான நிலையில் ரிலீஸ் தேதி குறித்து இந்த டீசரில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தனுஷ் ரசிகர்கள் மிகவும் குஷியில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement