• May 17 2024

பிக்பாஸ் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சூப்பர் சர்ப்ரைஸ்- பெஃஸ்ட் டைம் நடைபெறவுள்ள முக்கிய விடயம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 6 ஒரே நேரத்தில் டிவியிலும், OTT-யிலும் ஒளிப்பரப்பாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தமிழ் சின்னத்திரையில் மக்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் முக்கிய ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 6. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியானது அக்டோபர் மாதம் ஆரம்பமாகும் என்று ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.


சமீபத்தில் கூட விக்ரம் பாணியில் கமல் வசனம் பேசியிருந்த ப்ரோமோ ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.இதற்கிடையே தற்போது இந்த சீசனுக்கான போட்டியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் கிட்டத்தட்ட நிறைவுக் கட்டத்தை எட்டிவிட்டதாகச் சொல்கிறார்கள்.

மேலும் இந்த சீசனில் ஒன்று அல்லது இரண்டு இடங்களுக்கு மக்களிலிருந்து போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.அத்தோடு இந்த சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


அதுமட்டுமின்றி முதல்முறையாக பிக்பாஸ் சீசன் 6 ஒரே நேரத்தில் டிவியிலும், OTT-யிலும் ஒளிப்பரப்பாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி வழக்கம்போல 9.30 மணிக்கும் ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிப்பரப்பாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement