தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமின்றி இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர் மற்றும் பாடலாசிரியராகவும் திகழ்ந்து வருபவர் தான் நடிகர் தனுஷ்.
தனுஷ் தற்போது தெலுங்கு இயக்குனரான சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாக்கும் குபேரா படத்தில் நடித்து வருவதோடு, தனுஷ் இயக்கி நடித்து இருக்கும் ராயன் திரைப்படமும் இம்மாதம் 26ம் தேதி ரிலீஸ் ஆக தயாராக உள்ளது.
அதன்படி தனுஷ் கைவசம் தற்போது ஆறு படங்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்திலும் தனுஷ் தான் நடிக்க உள்ளார்.
இவ்வாறு அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வரும் தனுஷ் அடுத்ததாக பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல்ராயுடன் கூட்டணி வைத்துள்ளார். இது தொடர்பான தகவல்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
அதன்படி, இவர்கள் கூட்டணியில் உருவாகும் தேரே இஷ்க் மெயின் படத்தின் ஷூட்டிங் எதிர்வரும் அக்டோபர் மாதம் ஆரம்பமாக உள்ளதாம். மேலும் இந்தப் படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் வாரணாசியில் நடத்த திட்டமிட்ட இருப்பதாகவும், இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைப்பதாகவும் கூறப்படுகின்றது.
இந்த நிலையில், இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகையான Tripti Dimri நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார் என தகவல்கள் வெளியாகி வைரலாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!