• Apr 15 2026

உலகமே கொண்டாடும் ஒரு நடிகன்.. ஆனால் அவருக்கு சந்தோஷமே இல்லையா? மம்மூட்டியின் வாழ்க்கை..

shali / 1 month ago

Advertisement

Listen News!

மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் மம்மூட்டி. இவர் கடந்த சில வருடங்களாக தமிழ், மலையாளம், ஹிந்தி மற்றும் பிற மொழித் திரைப்படங்களில் நடித்து வருபவதுடன், வயதானாலும் தனது கலை மற்றும் நடிப்பில் எந்தவித மாற்றமும் இல்லாமல் இருந்து வருகின்றார். சமீபத்தில், அவர் ஒரு நிகழ்ச்சியில் தனது உடல்நிலை மற்றும் வாழ்க்கை அனுபவங்களை திறந்த மனதுடன் பகிர்ந்துள்ளார்.


நிகழ்ச்சியில் பேசும் போது மம்மூட்டி, "நீண்டகாலமாக என்னால் வாசனையையோ, சுவையையோ உணரமுடியவில்லை. நாம் இழக்கும் போது தான் அதன் உண்மையான மதிப்பு நமக்குத் தெரியும். இதில் இருந்து மெதுவாக மீண்டு வருகிறேன்."என்று கூறியிருந்தார். 

இந்த பேட்டி அவரது ரசிகர்களுக்குக் கவலை அளித்தாலும், அதே நேரத்தில் அவருடைய மனப்போராட்டம் மற்றும் மன உறுதியைப் பற்றிய புரிதலை ஏற்படுத்தி உள்ளது. அவர் தனது உடல்நிலையை திறந்த மனதுடன் பகிர்ந்ததால், ரசிகர்கள் அவரது நேர்மையை பாராட்டுகின்றனர்.

Advertisement

Advertisement