• Feb 26 2024

துணிவு படத்தின் வீடியோ காட்சிகள் நாஸ்டாக் கட்டிடத்தில் திரையிட முடிவு- டைம்ஸ் சதுக்கத்தில் விளம்பரம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

வரும் 2023 பொங்கலை முன்னிட்டு 11.01.2023 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள திரைப்படம் தான் துணிவு.இப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது 

மேலும் இந்த படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.மேலும் இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றி உள்ளது. ஓடிடி ஒளிபரப்பு உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ‌


சமீபத்தில் வெளியான துணிவு படத்தின் ட்ரெய்லர் 60 மில்லியன் பார்வையாளர்களை நோக்கி வைரலாகி வருகிறது. துணிவு படத்தின் அமெரிக்க ரிலீஸ் உரிமத்தை சரிகம நிறுவனம் கைப்பற்றியுள்ளது.இந்நிலையில் துணிவு படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வு அமெரிக்க நியூயார்க் நகரில் உள்ள உலகப்புகழ் பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் உள்ள நாஸ்டாக் கட்டிடத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


முதல் முறையாக இந்திய திரைப்படம் ஒன்று டைம்ஸ் சதுக்கத்தில் விளம்பரப்படுத்தப்பட உள்ளது . துணிவு படத்தின் வீடியோ காட்சிகள் நாஸ்டாக் கட்டிடத்தில் திரையிடப்படும் என்றும் அப்போது செல்ஃபி எடுத்து அனுப்பும் தேர்ந்தெடுக்கப்பட்ட ரசிகர்களுக்கு துணிவு படத்தின் இலவச டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement