• Apr 30 2026

மருமகளா? தலைவியா? எமோஷனலாக செக் வைத்த விஜயா.. மீனா எடுத்த அதிரடி முடிவு

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோட்டில், தேர்தலில் மீனா போட்டியிடுவதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என விஜயாவுக்கு தூண்டிவிடுகிறார் சிந்தாமணி.

இன்னொரு பக்கம் முத்துவும் மீனா வீட்டிற்கு வந்து அண்ணாமலைிடம் தான் தேர்தலில் நிற்பது பற்றி தெரிவித்து, ஸ்வீட் கொடுத்து தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். அந்த நேரத்தில் அங்கு வந்த விஜயா, ஸ்வீட்டை தூக்கி எறிந்து இந்த எலக்ஷனில் நிற்கக்கூடாது என்று கூறுகிறார்.

மேலும், “நீ இந்த வீட்டுக்கு மருமகளா இருக்கப் போகிறாயா இல்ல சங்கத்துக்கு தலைவியா இருக்கிறாயா என்று நீயே முடிவு பண்ணு” என மீனாவை கண்டபடி திட்டுகிறார். இதனால் மீனா உடைந்து போகிறார்.


எனினும், “இந்த தேர்தலில் நீ நிற்க வேண்டும், என்னுடைய ஆசீர்வாதம் உனக்கு எப்போதும் இருக்கும்” என அண்ணாமலை கூறுகிறார். முத்துவும் மீனாவுக்கு ஆதரவாக இந்த தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்று கூறுகிறார். அதன்படி இருவரும் இணைந்து தேர்தலுக்கான வாக்குறுதிகளை எழுதுகின்றனர்.

அதன் பிறகு, அதனை அச்சடித்து மக்களுக்கு விநியோகிக்கும் முன்பு அண்ணாமலை மற்றும் விஜயாவிடம் ஆசீர்வாதம் பெற மீனா முயற்சிக்கிறார். இதன்போது விஜயா “நான் வரமாட்டேன்” என்று மறுக்கிறார்.

அதற்கு அண்ணாமலை, “நீ இன்று யாரையும் மதிக்கவில்லை என்றால், நாளை உன்னை யாரும் மதிக்க மாட்டார்கள்” என்று கூறுகிறார். இதுதான் இன்றைய எபிசோட். 

Advertisement

Advertisement