• May 10 2024

முதன்முறையாக பிகினி ஆடையில் தர்ஷா குப்தா வெளியிட்ட போட்டோஸ்- பிறந்த நாள் கிப்ட்டா இது?

stella / 10 months ago

Advertisement

Listen News!


சின்னத்திரை சீரியல்களில் நடித்ததன் மூலம் பிரபல்யமானவர் தான தர்ஷா குப்தா.இவர் கொரோனா ஊரடங்கு சமயத்தில் சமூக வலைதளங்களில் பெரும்பாலான நேரத்தை செலவழித்து வந்த இளைஞர்களை கவரும் விதமாக தினசரி போட்டோஷூட்களை நடத்தி வந்தார்.இதனால் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவானது.


தொடர்ந்து சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும், சட்டென சீரியலில் நடிக்கத்தொடங்கிய தர்ஷாவுக்கு திடீரென கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் குக் வித கோமாளி நிகழ்ச்சி. அந்நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனார் . அந்நிகழ்ச்சியில் அவரால் பைனல் வரை முன்னேற முடியாவிட்டாலும், அதன்மூலம் கிடைத்த புகழ்வெளிச்சத்தின் காரணமாக சினிமாவில் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன.


அந்த வகையில் தர்ஷா குப்தா தமிழ் சினிமாவில் முதன்முதலில் நடித்த திரைப்படம் ருத்ர தாண்டவம். இதில் நடிகர் அஜித்தின் மச்சான் ரிச்சர்ட் ரிஷிக்கு ஜோடியாக நடித்திருந்தார் . இதையடுத்து ஓ மை கோஸ்ட் என்கிற பேய் படத்தில் நடித்திருந்தார் . இப்படத்தில் சன்னி லியோனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவருக்கே டஃப் கொடுக்கும் வகையில் கவர்ச்சியும் காட்டி இருந்தார் .


தற்போது நடிகை தர்ஷா குப்தா நடிப்பில் மெடிக்கல் மிராக்கிள் என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் யோகிபாபு தான் கதையின் நாயகனாக நடித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. சினிமாவில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தாலும், தன்னை ரசிகர்கள் மத்தியில் பேமஸ் ஆக்கிய போட்டோஷூட்களை தொடர்ந்து நடத்தி வருகின்றார் .


அந்த வகையில் அண்மையில் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாட அந்தமானுக்கு சென்ற இவர் பிகினி உடையில் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவதோடு படவாய்ப்புக்காக இப்படி மாறிட்டாங்களே என்று கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement