• Apr 27 2024

இது எளிதான வேலை இல்லை, நிறைய தடைகளை சந்தித்தேன்- ஜிம் ஒர்க்கவுட் குறித்து ஓபனாக பேசிய லாஸ்லியா- குவியும் வாழ்த்துக்கள்

stella / 10 months ago

Advertisement

Listen News!

இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளராக இருப்பவர் தான் லாஸ்லியா.இவர் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் பிரபல்யமானார்.இதனைத் தொடர்ந்து சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகினார்.அதன் படி ஃப்ரெண்ட்ஷிப் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.


 இப்படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக நடித்தார் லாஸ்லியா.மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீசான ஃப்ரெண்ட்ஷிப் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. இதையடுத்து தனது சக பிக்பாஸ் போட்டியாளரான தர்ஷன் உடன் கூட்டணி அமைத்த லாஸ்லியா, அவருக்கு ஜோடியாக கூகிள் குட்டப்பா என்கிற திரைப்படத்தில் நடித்தார்.


 கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்த இப்படம் மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் என்கிற திரைப்படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இப்படம் பிளாப் ஆனதால், லாஸ்லியாவுக்கு பட வாய்ப்புகள் குறையத் தொடங்கின.இதையடுத்து சட்டென உடல் எடையை குறைத்த லாஸ்லியா, படவாய்ப்புகளை பிடிப்பதற்காக படிப்படியாக கவர்ச்சி ரூட்டுக்கு திரும்பினார். 


விதவிதமான கவர்ச்சி உடையில் போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வாய்ப்பு தேடி வருகிறார். அந்த வகையில் தற்பொழுது தன்னுடைய ஜிம் பயணம் குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்களைப் பதிவிட்டு கூறியதாவது 2021-ல் எனது  ஒர்க் அவுட்டைத் தொடங்கியபோது, ​​அது மிக நீண்ட பயணம். இந்தப் பயணத்தில் நிறைய தடைகளைச் சந்தித்தேன்.

இது எளிதான வேலை இல்லை, சில நேரங்களில் நான் எழுந்திருக்க விரும்பவில்லை, நான் தூங்க விரும்புகிறேன், சில நேரங்களில் என் உடல் எனக்கு ஒத்துழைக்காது. சில சமயங்களில் என் மனம் சொல்கிறது, உட்கார்ந்து உங்கள் மன ஆரோக்கியத்தை அமைதிப்படுத்துங்கள்.

ஆனால் நான் ஒரு விஷயத்தை உணர்ந்தேன், சீக்கிரம் எழுந்து என் வேலையைச் செய்வது மற்றும் எனது அன்றாட வழக்கத்தை செய்வது நான் எவ்வளவு ஒழுக்கமாக இருக்கிறேன் என்பதைக் கற்றுக் கொடுத்தது.கிட்டத்தட்ட 3 வருடங்கள் ஆகிவிட்டது. முன்பை விட வலுவாகவும் ஆரோக்கியமாகவும் உணர்கிறேன் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement

Advertisement