• Apr 17 2026

'அப்பா எப்போதும் என் கூடவே இருப்பாரு..' லண்டனில் விஜயகாந்தின் மகன் செய்த காரியம்! மெய்சிலிர்க்கும் போட்டோஸ்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்ந்த நடிகர் விஜயகாந்த், கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் மறைந்தார். அவரது பிரிவு இன்னும் மக்கள் மத்தியில் நீங்காமல் உள்ளது.

இந்த நிலையில், மறைந்த நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன், தனது அப்பாவின் கண்களை பச்சை குத்திய வீடியோ வைரலாகியுள்ளது.


விஜயகாந்தின் இளைய மகனான  சண்முகபாண்டியன், 'சகாப்தம்' என்ற படம் மூலம் கதாநாயகனாக தென்னிந்திய திரை உலகுக்கு அறிமுகமானார்.

இதன்பின், ஜல்லிக்கட்டை மையப்படுத்தி உலகுக்கு என்ற படத்தில் நடித்தார். தொடர்ந்து தமிழன் என்று சொல் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்த படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்றது. இதற்காக, லண்டன் சென்ற சண்முகபாண்டியன், அங்கு தன் தந்தையின் டெரர் கண்களை தன் இடது கையில் பச்சை குத்திக்கொண்டிருக்கிறார்.


இவ்வாறு லண்டனில் இருந்து திரும்பிய அவர், தன் கையில் வரைந்த டாட்டூ கண்களை தந்தை விஜயகாந்த்திடம் காண்பித்து மகிழ்ந்துள்ளார்.

இவ்வாறான நிலையில், விஜயகாந்தின் மறைவையொட்டி அவரது இளைய மகன் சண்முகபாண்டியன் டாட்டூ ஒட்டிய புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



Advertisement

Advertisement