• Jan 19 2025

நடிகர் விஜயின் அலுவலக உதவியாளர் திடீர் கைது..! அரசியல் சூழ்ச்சியா?திடுக்கிடும் காரணம்?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் இளைய தளபதி விஜய் அவர்கள். இறுதியாக இவர் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் மாபெரும் வெற்றியை குவித்தது. 

இதைத்தொடர்ந்து இன்றைய தினம் தளபதி 68 படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டும் வெளியாகி, ரசிகர்களை மேலும் வெறித்தனமாக்கியது.

இந்த நிலையில், நடிகர் விஜயின் அலுவலக உதவியாளர் ஒருவர் போலீசாரால் திடீரென கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் தற்போது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 


இது தொடர்பில் வெளியான தகவல்களின் அடிப்படையில், நடிகர் விஜய்க்கு உதவியாளராக பணியாற்றுவதாக கூறிய இளைஞன் ஒருவர், அவர் பெயரை சொல்லி பல பெண்களை ஏமாற்றியுள்ளார் என தெரியவந்துள்ளது.

அவ்வாறு, நடிகர் விஜய் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பெண்களுக்கு அனுப்பி அதன் மூலம் பணங்களை பெற்று வந்துள்ளார். அத்துடன், குறித்த பெண்களுக்கு  திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தைகளை கூறி ஏமாற்றியுள்ளார்.  


இவ்வாறான நிலையில், குறித்த நபர் தொடர்பில் உஷாரான பெண் ஒருவர், விஜய் பேரை பயன்படுத்தி அவர் செய்த மோசடிகள் அனைத்தையும் வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளார். 

இதைத்தொடர்ந்து,  குறித்த நபரை அதிரடியாக போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், அவர் மீது பல பிரிவுகளில் வழக்குப்பதிவு  செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இடைவேளை, நடிகர் விஜயின் பெயரை சொல்லி இன்னும் எத்தனை பெண்களை ஏமாற்றியுள்ளார் என போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement