• May 07 2024

அப்பாவுக்கும் எனக்கும் நிறைய கனெக்ஷன் இருக்கு -டான் படத்தால் உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கிய சிம்பு

stella / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரை மூலம் அறிமுகமாகி இன்று வெள்ளித்திரையில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும் நடிகர் தான் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் சமீபகாலமாக வெளியாகும் திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்று வருகின்றது. அந்த வகையில் இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய டான் திரைப்படமும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.

கடந்த மே 13-ந்தேதி வெளியான இந்தத் திரைப்படத்தினை அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள இந்த படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருந்தது.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்திருந்தார். மேலும் டான் படத்தில் சூரி, சமுத்திரக்கனி, விஜய் டிவி புகழ் சிவாங்கி, ஆர்.ஜே.விஜய், முனிஷ்காந்த், பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இப் படம் வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக சென்னையில் டான் வெற்றிக்கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சிவகார்த்திகேயன் மேடையில் பேசும்போது, என்னோட படம் ரிலீஸ் ஆனால் சில பிரபலங்கள் என்னிடம் போன் செய்து பேசுவார்கள். அதோ போல டான் ரிலீஸ் ஆன பிறகு ரஜினி சேர் போன் பண்ணி பேசினாரு.

அதே போல சிம்பு சேரும் போன் பண்ணி பேசினாரு. அவர் பேசும் போது சொன்னாரு படத்தில நடிச்சிருக்கிறவங்க எல்லாருமே சூப்பரா பண்ணியிருக்கிறாங்க அப்பாவுக்கும் எனக்கும் நிறைய கனெக்ஷன் இருக்கு அதனால கடைசி சீனை பார்க்கும் போது கண் எல்லாம் கலங்கிடுச்சு. கண்ணை மூடி மூடித்தான் பார்த்தேன். அத்தோடு அவர் எல்லாரையும் பாராட்டினார் என்றும் சிவா கூறியிருந்தார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement