• May 19 2024

முன்னாள் மனைவி மீது வழக்கு தொடுத்த பிரபல நடிகர்- நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் ரூ.48 லட்சத்திற்கு விருந்து..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவில் ஒரு சில படங்கள் மூலம் மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர் தான் ஜானி டெப்.இவர் 'பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்' திரைப்படத்தில் ஜேக் ஸ்பேரோ என்ற கதாபாத்திரம் மூலம் இந்திய மக்களிடம் பிரபலமடைந்தவர் .

50 வயதாகும் ஜானி டெப், தன்னைவிட 25 வயது குறைவான ஹாலிவுட் நடிகை ஆம்பர் ஹேர்டை கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். ஆனால், 15 மாதங்கள் மட்டுமே நீடித்த இவர்களின் திருமண வாழ்க்கை பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக முடிவுக்கு வந்தது. இருவரும் பரஸ்பரம் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதனிடையே, கடந்த 2018 ஆம் ஆண்டில் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் ஒரு கட்டுரை ஆம்பர் ஹேர்ட் எழுதினார்.

மேலும் அதில் அவர் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் குறித்து ஜானியின் பெயரை குறிப்பிடாமல் அதில் எழுதி வெளியிட்டார். அவர் அந்த கட்டுரையில் தெரிவித்தது ஹாலிவுட் உலகை அதிரவைத்தது. அத்தோடு இந்த கட்டுரை வெளியானதில் இருந்து ஜானி டெப் பட வாய்ப்புகளை இழந்தார். அக்ரிமன்ட் சைன் வைத்த படங்களிலும் இவர் நடிப்பதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது.அதையும் ஏற்றுக்கொண்டார் ஜானி டெப்.

இதை எல்லாம் பொறுக்க முடியாமல் கடந்த 2018 ஆம் ஆண்டில் ஜானி டெப், ஆம்பர் மீது கட்டுரைக்கு குற்றம்சாட்டி அவதூறாக ரூ.380 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடுத்தார். தனது சினிமா வாழ்க்கையை ஆம்பர் சிதைத்து வருவதாக ஜானி தொடர்ந்த வழக்குதான் உலகளவில் அளவில் பேசப்பட்டது வந்தது. அத்தோடு கடந்த சில நாட்களாக வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அதுவும் இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணை கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த இறுதிகட்ட விசாரணை உலக அளவில் பேசுபொருளானது.

இதனிடையே இந்த வழக்கில் அண்மையில் தீர்ப்பு வெளியானது. அதில், ஜானி டெப்பிற்கு ஆதரவான தீர்ப்பே கிடைத்தது. அதன்படி, ஜானி டெப்பிற்கு எதிராக அவதூறு பரப்பும் நோக்கத்துடன் ஆம்பர் செயல்பட்டது உறுதியாக தெரிகின்றது என கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இதனால் ஜானிக்கு இழப்பீடாக 78 கோடி ரூபாயும், அபராதமாக 38 கோடி ரூபாயும் என மொத்தம் 116 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பை கொண்டாடும் வகையில் ரூ.48.1 லட்சத்திற்கு ஜானி டெப் நண்பர்களுக்கு விருந்து அளித்துள்ளார்.

இங்கிலாந்திலுள்ள பிர்மிங்கம் பகுதியில் இயங்கும் பிரபல இந்திய உணவகத்திற்கு சென்ற அவர், ரூ.48.1 லட்சத்திற்கு வகைவகையான இந்திய உணவுகளை வாங்கி நண்பர்களுக்கு கொடுத்துள்ளார்.

மேலும் இந்த விருந்தில் 21 பேர் கலந்துகொண்டதாக சொல்லப்படுகின்றது.. இந்த விருந்து குறித்து உணவக உரிமையாளர் கூறுகையில், ஜானி டெப்பின் அணுகுமுறை மிகவும் எளிமையாக இருந்தது. கர்வம் இல்லாமல் அவர் எங்கள் ஊழியர்களுடன் பழகினார் என தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement