• May 04 2024

பிக்பாஸிற்கு வருமாறு 'CWC' பெண் கோமாளிக்கு அழைப்பு... அட இவரா அது.. அப்போ இவங்களும் வாறாங்களா..? தீயாய் பரவும் தகவல்..!

Prema / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரை ஒவெ்வான்றிலும் ரசிகர்களைக் கவரும் விதமாக பல ரியாலிட்ரி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருவதுண்டு. அந்த வகையில் விஜய் டிவியில் ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்த ரியாலிட்ரி ஷோவாக ஒளிபரப்பாவது தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் இதுவரைக்கும் 6 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்து விட்டது.


கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வந்த பல இளம் நடிகைகள் மற்றும் நடிகர்கள் பங்கேற்க போட்டிப் போட்டனர். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகும் தங்கள் வாழ்க்கையில் எந்தவொரு மாற்றமும் நடக்காததை தெரிந்து கொண்ட பலரும் கடந்த சில சீசன்களாக அதிக சம்பளம் கொடுக்கிறோம் என அழைப்பு விடுத்தாலும் தாங்கள் வரவில்லை என பெரிய கும்பிடு போட்டு வருகின்றனராம்.


இந்நிலையில் குக்வித் கோமாளி  ஷோவில் பங்கேற்ற பெண் போட்டியாளர்களில் ஒருவருக்கு பிக்பாஸ் குழுவினர் பிக்பாஸ் சீசன் 7இல் கலந்து கொள்ளுமாறு கூறி அழைப்பு விடுத்திருந்ததாகவும், ஆனால் கோமாளியாக கலந்து கொண்ட அந்தப் போட்டியாளர் தான் பிக்பாஸிற்கு வர மாட்டேன் எனக் கூறி மறுப்புத் தெரிவித்துள்ளதாகவும் தற்போது ஒரு தகவல் வெளியாகி இருக்கின்றது.


 இதனை அறிந்த ரசிகர்கள் அது வேறு யாருமில்லை சுனிதா தான் எனக்கூறி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement