• May 18 2024

கணவன்-மனைவி இணைந்து நடித்த படத்தில் சாயிஷா வாங்கிய சம்பளம்... அட இவ்வளவா..? வாயை பிளந்த ரசிகர்கள்...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் மனங்களை கொள்ளை கொண்ட பெண் நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை சாயிஷா. இவர் ஏ.எல். விஜய் இயக்கத்தில், ஜெயம்  நடிப்பில் வெளிவந்த 'வனமகன்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர்.


இப்படத்தில் தன்னுடைய  சிறந்த நடிப்பினை வெளிப்படுத்தி இருந்தமையால் தொடர்ந்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பினை பெற்றார்.  அந்த வகையில் விஜய் சேதுபதியின் 'ஜூங்கா', ஆர்யாவின் 'கஜினிகாந்த்', கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம்', சூர்யாவின் 'காப்பான்' என பல படங்களில் நடித்து வந்துள்ளார். 


இதில் 'கஜினிகாந்த்' என்ற படத்தில் இணைந்து நடித்த போது ஆர்யாவுடன் சாயிஷாவிற்கு காதல் மலர்ந்துள்ளது. இதன்பின்பு இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2019-ஆம் ஆண்டு இவர்கள் இருவருக்கும் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த அழகான காதல் தம்பதிக்கு Ariana எனும் ஒரு அழகிய பெண் குழந்தை கடந்த 2021-ஆம் ஆண்டு பிறந்தது.


இந்நிலையில் இவர்களின் காதலுக்கு அடித்தளமாக இருந்த 'கஜினிகாந்த்' படம் பற்றிய ஒரு தகவல் சமீபத்தில் வெளியாகி இருக்கின்றது. அதாவது இப்படத்தில் தனது கணவர் ஆர்யாவுடன் இணைந்து நடிக்க நடிகை சாயிஷா ரூ. 75 லட்சம் சம்பளமாக வாங்கியுள்ளார் எனக் கூறப்படுகின்றது. இதனை அறிந்த ரசிகர்கள் "இப்படத்திற்கே இவ்வளவு சம்பளமா" என ஆச்சரியத்துடன் கேட்டு வருகின்றனர்.


Advertisement

Advertisement