• Sep 25 2023

விஷால் நடிப்பில் வெளியாகிய மார்க் ஆண்டனி திரைப்படம் எப்படி இருக்கின்றது- வெளியாகிய டுவிட்டர் விமர்சனம்

stella / 1 week ago

Advertisement

Listen News!


இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம் இன்றைய தினம் வெளியாகியுள்ளது.

எனவே திரையரங்கில் வெளிவந்துள்ள மார்க் ஆண்டனி படத்தை அதிகாலை காட்சி பார்த்த ரசிகர்கள் தங்களுடைய விமர்சனத்தை சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.இதில் மார்க் ஆண்டனி முதல் பாகம் சூப்பர். விஷால் மற்றும் எஸ்.ஜே. சூர்யா நடிப்பு பட்டையை கிளப்புகிறது. இடைவேளை காட்சி செம மாஸாக உள்ளது.


குறிப்பாக ஜி.வி. பிரகாஷ் இசை மற்றும் ஆக்ஷன் காட்சிகள் அருமையாக இருகிறது என படத்தை பார்த்த ரசிகர்கள் விமர்சனம் தெரிவித்துள்ளனர். இதனால் இந்தத் திரைப்படம் விஷாலுக்கு நல்ல கம்பேக்காக இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.





Advertisement

Advertisement

Advertisement