• May 18 2024

திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட ஆண்ட்ரியாவின் தங்கை- அடடே இவர் தான் சகோதரியா?- குவியும் வாழ்த்துக்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மாடல் அழகியாகவும் பாடகியாகவும் அறிமுகமாகியவர் தான் ஆண்ட்ரியா. இதனைத் தொடர்ந்து இவர் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் வடசென்னை திரைப்படம் இவரது கெரியரில் திருப்பு முனையாக அமைந்தது.


அந்த வகையில் இவர் நடிப்பில் இறதியாக அரண்மனை 3' & வட்டம் ஆகிய படங்கள் வெளியாகியிருந்தது. தற்பொழுது ஷாலோம் ஸ்டுடியோஸ் ஜான்மேக்ஸ் தயாரிப்பில் ஆண்ட்ரியா 'கா' படத்தில் நடித்து முடித்துள்ளார். 


மேலும் ஆண்ட்ரியா நடிப்பில் மாளிகை & நோ என்ட்ரி, அனல் மேலே பனித்துளி ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன.சில நாட்களுக்கு முன் நடிகை ஆண்ட்ரியா தனது தோழிகளுடன் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகருக்கு சுற்றுலா சென்றார். பாரிஸ் நகரில் உள்ள உணவகங்களில் உணவு உண்ணும் வீடியோ காட்சிகள், ஈபிள் கோபுரம், Louvre Museum அமைந்துள்ள Louvre Pyramid  அருகில் எடுத்த புகைப்படங்களை  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.


இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியா தனது தங்கையின் திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். எனது "தங்கையின் திருமணம் நடந்தது" என‌ தலைப்பிட்டு மணமக்களை ஆண்ட்ரியா வாழ்த்தியுள்ளார்.ஆண்ட்ரியாவின் தங்கை நடியா, பெல்ஜியம் நாட்டில் வசித்து வருகிறார். மணமகனின் பெயரை ஆண்ட்ரியா செட்ரிக் என குறிப்பிட்டுள்ளார். கிறிஸ்தவ முறைப்படி இந்த திருமணம் தேவாலயத்தில் நடைபெற்றுள்ளது.





Advertisement

Advertisement