• May 05 2024

10 வது திருமண விழாவை இத்தாலியில் கொண்டாடிய நடிகர் ராம் சரண்- குவியும் பாராட்டுக்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

2007 இல் சிறுத்தை என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரைத்துறையில் அறிமுகமானவர் நடிகர் ராம் சரண். இப்படத்தின் மூலம் சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருது கிடைக்கப்பெற்றது

இவர் நடித்த திரைப்படங்கள் நல்ல வரவேற்பையும் வசூலையும் அளிக்குவித்தன. இவர் நந்தி விருது பிலிம்பேர் விருது போன்றவற்றை வென்றார். தொடர்ந்து 2009 இல் ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த மாவீரன் என்ற திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று மகா ஹிட் வசூலை கொடுத்தது.

இவ்வாறு சினிமாவில் பிஸியாக வலம் வந்தா நடிகர் ராம்சரண், கடந்த 2011 உபாசனா காமினி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இவர்கள் திருமணம் செய்து 10 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில்
இவர்கள் தங்களுடைய திருமண ஆண்டு விழாவை இத்தாலியிலுள்ள ஃப்ளோரன்ஸ் என்ற இடத்திற்கு சுற்றுலா சென்று கொண்டாடியுள்ளனர்.

மேலும் இருவரும் திருமண நாளில் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளனர். இவர்களுக்கு ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement