• May 04 2024

தனது மகள் சித்தாராவுடன் சாலையில் நடந்து செல்லும் நடிகர் மகேஷ்பாபு- கியூட்டான வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கு திரைப்படத்தின் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் மகேஷ்பாபு. இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் ராஜகுமாருடு திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியாகிய புகாரி, ஒக்கடு ,அத்தடு போன்ற திரைப்படங்கள் நல்ல வசூலைக் கொடுத்தன.

இவர் நடித்த திரைப்படங்கள் நல்ல வரவேற்பு பெற்று கொடுத்ததால் தெலுங்கில் முன்னணி நடிகராக தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ளார். இவ்வாறு சினிமாவில் பிஸியாக நடித்து வந்த மகேஷ்பாபு கடந்த 2000ம் ஆண்டில் தெலுங்கு நடிகை நர்மதாவுடன் "வம்சி" படத்தில் நடித்தார்.

அதில் நடிக்கும்போது காதல் ஏற்பட்டு கடந்த 2005ல் இவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். தெலுங்கு ரசிகர்களின் விருப்பமான ஜோடியாக இருக்கும் இத்தம்பதிகளுக்கு கௌதம் என்ற மகனும் சித்தாரா என்ற மகளும் உள்ளனர்.

அந்தவகையில் நடிகர் மகேஷ்பாபு தனது மகளான சித்தாராவுடன் சாலையில் நடந்து சென்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலகி வருகின்றது. மகேஷ் பாபுவும் அவரது மகள் சித்தாரா அவரும் பேசிக்கொண்டே சாலையில் மகிழ்ச்சியாக நடந்துவருகின்றனர்.

அவர்கள் இருவரைத் தவிர சாலையில் யாரும் இல்லை. இதனை அவரது மகள் சித்தாரா சம்மர் வாக் வித் அப்பா என்று தலைப்பில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகின்றது. இந்த வீடியோ ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு பகிரப்பட்டு வருகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement