• May 12 2024

டெல்லிக்கு திடீரென விசிட் அடித்த சூரரைப் போற்று திரைப்படக்குழு- ரசிகர்களால் குவியும் வாழ்த்துக்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இப்படத்தில் இவருடன் இணைந்து அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு, பரேஷ் ராவல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

இந்த படம் அமேசான் பிரைம் வீடியோவில் டிஜிட்டல் முறையில் வெளியிடப்பட்டது.ஓய்வு பெற்ற கேப்டன் ஜி.ஆர். கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாறைத் தழுவியும்,  அவரது கனவு திட்டமான குறைந்த கட்டண விமான நிறுவனமான ஏர் டெக்கான் தொடங்கப்பட்டதன் பின்னணியும் இந்த படத்தில் கதைக்களமாக இடம்பெற்றன.


அண்மையில் கடந்த 2020 ஆம் ஆண்டிற்கான 68வது தேசிய திரைப்பட விருதுகள் 2022 அறிவிக்கப்பட்டது.சூர்யாவின் ‘சூரரைப் போற்று’திரைப்படம்  சிறப்புத் திரைப்படப் பிரிவில் 5 முக்கிய விருதுகளை வென்றது. அதாவது:

● சிறந்த திரைப்படம்: சூரரைப் போற்று (தமிழ்); தயாரிப்பாளர்: 2டி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட்; இயக்குநர்: சுதா கொங்கரா

● சிறந்த நடிகர்: சூரரைப் போற்று (தமிழ்); நடிகர்: சூர்யா

● சிறந்த நடிகை: சூரரைப் போற்று (தமிழ்); நடிகை: அபர்ணா பாலமுரளி

● சிறந்த திரைக்கதை: சூரரைப் போற்று (தமிழ்) திரைக்கதை எழுத்தாளர் (அசல்): ஷாலினி உஷா நாயர் & சுதா கொங்கரா


● சிறந்த பின்னணி இசை: சூரரைப் போற்று (தமிழ்) - ஜீ.வி.பிரகாஷ் குமார். ஆகிய 5 தேசிய விருதுகளை சூரரைப் போற்று வென்றது.

இந்நிலையில் நாளை (30.09.2022) புது டெல்லியில் 68வது தேசிய விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது. இதற்காக சூரரைப் போற்று படக்குழுவினர் டெல்லி சென்ற புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாக பரவி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.


 

Advertisement

Advertisement

Advertisement