• May 18 2024

சமந்தாவின் படத்திற்கு தளபதி விஜய்யின் ஹிட் பட தலைப்பா..வெளியானது மற்றுமொரு சூப்பர் அப்டேட்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பாணா காத்தாடி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ் ,தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளில் கலக்கி வருபவர் நடிகை சமந்தா. விஜய் , சூர்யா, விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்து நல்ல ஹிட் படங்களை சினிமாத்துறைக்கு கொடுத்துள்ளார்.

தமிழில் இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய காத்துவாக்கில ரெண்டு காதல் திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்று வருவதோடு விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

இதனைத் தொடர்ந்து தமிழ் ,தெலுங்கு ,மலையாளம் ,கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகி வரும் சமந்தாவின் புதிய திரைப்படம் யசோதா. இந்த படத்தில் சமந்தாவுடன் வரலட்சுமி முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் . இந்த படத்தை கிருஷ்ண பிரசாத் என்பவர் இயக்கி வருகிறார்.

இந்நிலையில் விஜய்யின் ஹிட் படங்களில் ஒன்றான குஷி என்ற பெயரை தற்போது விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடித்த படத்தின் பெயருக்கு சூட்டி இருக்கிறார்கள் என தகவல் கசிந்து உள்ளது.

மேலும் குஷி தமிழில் ஹிட் ஆன பின் தெலுங்கிலும் ரிமேக் செய்யப்பட்டது. அதே தலைப்பை தான் தற்போது இந்த படத்திற்கு வைக்க படக்குழு முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இருப்பினும் அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தால் தான் அது உறுதியாகும்.

வரும் மே 9ம் தேதி தற்போது பர்ஸ்ட் லுக் போஸ்டர் உடன் அறிவிப்பு வரும் என அறிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement