• May 18 2024

ஆடி கார் வாங்கிய அதிதி ராவ் ஹைதாரி-வைரலாகி வரும் புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் சில திரைப்படங்கள் நடித்ததன் மூலம் பிரபல்யமானவர் தான் நடிகை அதிதி ராவ் ஹைதாரி. இவர் தமிழில் செக்கச் சிவந்த வானம், காற்று வெளியிடை போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபல்யமாகியுள்ளார்.

தமிழில் மட்டுமல்லாது ஹிந்தி ,தெலுங்கு ஆகிய மொழிகளிலும் பல திரைப்படங்களில் தனது கவனத்தைத் செலுத்தி வருகின்றார். சமூக வலைத்தளங்களில் அதிக ஆர்வமாக இருக்கும் இவர் தனது புகைப்படங்களையும் பதிவிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.அந்த புகைப்படங்கள் ரசிகர்களிடத்தே வைரலாகி விடும்.

எனினும் தற்போது ஜூபிலி என்ற வெப்தொடரில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது 90 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆடி கார் ஒன்றை வாங்கி இருக்கிறார் அதிதி.

மேலும் இந்த தகவலை மும்பை ஆடி கார் நிறுவனம் சமூகவலைத்தளத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டு இருக்கிறது.

ஆடி கார் குடும்பத்தில் அதிதியை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம், வாழ்த்துக்கள் என்றும் அவர்கள் பதிவு ஒன்றை பதிவேற்றி உள்ளார்கள்.இந்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்...

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement