• May 06 2024

தளபதி 67 கூட்டணியின் சந்திப்பு-துள்ளிக்குதிக்கும் ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நட்ச்சத்திரமாக திகழ்பவர் நடிகர் விஜய்.இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கடும் விமர்சனங்களை சந்தித்து பாக்ஸ் ஆபிஸில் சொதப்பியது.

மேலும் அப்படத்தை தொடர்ந்து விஜய் தனது 66-வது திரைப்படமாக உருவாகி வரும் தளபதி 66 திரைப்படத்தில் இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஸ்மிகா மந்தனா நடித்து வருகின்றார்.இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். விஜயின் குடும்பத்தில் சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த், சங்கீதா என பல முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள்

தளபதி 66 திரைப்படம் முடியும் முன்பே அவரின் தளபதி 67 திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் காணப் படுகிறது. ஏன்னென்றால் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மீண்டும் நடிக்க இருக்கிறார் விஜய்.

எனினும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் அப்படம் குறித்து லோகேஷ் கனகராஜ் பல இடங்களில் பேசிவிட்டார்.

இந்நிலையில் தற்போது தளபதி 67 பட கூட்டணியின் சந்திப்பு இன்று நடந்திருக்கிறது. ஆம், விக்ரம் பட வெற்றியை வாழ்த்த தயாரிப்பாளர்கள் கமல் மற்றும் லோகேஷ் கனகராஜை சந்திதுள்ளனர்.

அத்தோடு தளபதி 67 படத்தை தயாரிக்கும் லலித்குமார் மற்றும் லோகேஷ் கனகராஜ் சந்திதுள்ளனர். அவர்கள் எடுத்து கொண்ட புகைப்படம் தான் தற்போது விஜய் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement