• Apr 19 2024

சமந்தா செய்யும் வேறொரு தொழில்-சினிமாவை தாண்டி கோடிக்கணக்கில் வருமானம்-என்ன தெரியுமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

திரையுலகில் உச்ச பிரபலங்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம்வருபவர் நடிகை சமந்தா.தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பிஸியாக நடித்து வரும் நடிகை சமந்தா.

கடந்த 28ஆம் திகதி நடிகை சமந்தாவின் பிறந்த நாளன்று காத்துவாக்குல 2 காதல் திரைப்படம் வெளியாகியுள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதி, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, போன்ற பல பிரபலங்கள் இப் படத்தில் நடித்துள்ளனர். மாஸ் ஹிட் கொடுத்த இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டை நடத்தி வருகின்றது.

அத்தோடு இவர் கைவசம் தற்போது யசோதா, குஷி மற்றும் சாகுந்தலம் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இதுவரை ஒரு படத்திற்கு ரூ. 3 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார் சமந்தா.

இது படங்களில் நடிக்க மட்டுமே அவர் வாங்கும் சம்பளம். நடிகை சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவு செய்வது மட்டுமின்றி, சில பொருட்களையும் அதில் விளம்பரப்படுத்துவார்.

மேலும் ஒரு மாதத்தில் சமந்தா விளம்பரப்படுத்தும் பொருட்களுக்காக அவர் வாங்கும் சம்பளம் மட்டுமே ரூ. 3 கோடி என்று தகவல் கசிந்துள்ளது.

சமீபத்தில் கூட நடிகை சமந்தா விலையுர்ந்த Bikini ஆடையை விளம்பரப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement