• May 04 2024

ஓவர் ரியாக்சன் கொடுத்து கீழே குதித்த சதீஷ்.... முறைத்துப் பார்த்த சைனீஸ் பெண்... விழுந்து விழுந்து சிரிக்கும் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் சதீஷ். இவர் ‘கொலை கொலையா முந்திரிக்கா’ என்ற படத்தின் மூலம் முதன்முதலாக சினிமாவில் அறிமுகமாகி இருந்தார்.


தன்னுடைய அறிமுகப் படத்திலேயே தன்னுடைய இயல்பான நடிப்பினால், நகைச்சுவைப் பாணியினாலும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனங்களை கவர்ந்து விட்டார். இதனால் தொடர்ந்தும் பல படவாய்ப்புகள் இவருக்கு வந்து குவியத் தொடங்கின.

அந்தவகையில் 'மெரினா, தமிழ் படம், மதராச பட்டணம், வாகை சூடவா, தாண்டவம், எதிர்நீச்சல், கத்தி, மான்கராத்தே, ரெமோ, வேலைக்காரன், மிஸ்டர் லோக்கல், கலகலப்பு-2, சிக்ஸர்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.


இவ்வாறாக படங்களில் பிஸியாக நடித்து வந்த சதீஷ், சிந்து என்பவரை 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து குடும்ப பந்தத்தில் இணைந்து கொண்டார். இவர்களுக்கு 2020 ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. 

திருமணத்தை தொடர்ந்தும் நடிகர் சதீஷ் படங்களில் பிஸியாக நடித்து வருகின்றார். அதுமட்டுமல்லாது காமெடி ரேஞ்சுக்கு இருந்தவர் தற்போது ஹீரோவாகவும் வளர்ந்திருக்கின்றார்.


இவர் எந்த புகைப்படத்தையாவது வெளியிட்டாலும் சரி, வீடியோவைப் பகிர்ந்தாலும் சரி அது உடனே ரசிகர்கள் மத்தியில் வைரலாகி விடுவது வழமை.

அந்தவகையில் இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றினை பகிர்ந்திருக்கின்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரித்து வருகின்றார்கள்.


அதாவது சதீஷ் ஒரு கோபுரத்தின் அடியில் உள்ள சிறிய தூணின் மேல் ஏறி கோபுரத்தின் உச்சத்தில் இருந்து கீழே குதிப்பது போன்று ரியாக்ஷன் கொடுத்து கீழே குதிக்கின்றார். அதனைப் பார்த்த சைனீஸ் பெண் ஒருவர் அவரை வித்தியாசமான பார்வையால் நோக்குகின்றார். இதுவே அந்த வீடியோவில் பதிவாகி இருக்கின்றது.

Advertisement

Advertisement

Advertisement