• May 18 2024

கொலை மிரட்டல் வழக்கு.. மணிரத்னம் பட நடிகைக்கு திடீரென விடுக்கப்பட்ட பிடிவாரண்ட்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை காயத்ரி சாய்க்கு எதிராக திடீரென நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.மூத்த பத்திரிகையாளர் பிரகாஷ் எம் ஸ்வாமி மீது பாலியல் குற்றச்சாட்டு கூறியிருந்தார் முன்னாள் நடிகை காயத்ரி சாய்.

காயத்ரி சாய் மீது கொலை மிரட்டல் வழக்கை பத்திரிகையாளர் பிரகாஷ் எம் ஸ்வாமி தொடுத்த நிலையில், விசாராணைக்கு முன்னிலையாகாமல் தட்டிக் கழித்து வரும் காய்த்ரி சாயை கைது செய்து அழைத்து வர போலீஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் 1990ம் ஆண்டு வெளியான அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் பிரபல  நடிகை காயத்ரி சாய். மிஸ் சென்னை சோஷியல் ஆக்டிவிஸ்ட் ரன்னர் அப் ஆன இவர் சினிமாவில் ஃபேஷன் டிசைனராக பணியாற்றி வருகின்றார். இவருக்கு மூத்த பத்திரிகையாளர் பிரகாஷ் எம் ஸ்வாமி பாலியல் தொல்லை கொடுத்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை  கூறினார்.


சென்னையை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் பிரகாஷ் எம் ஸ்வாமி(66). இவருக்கெதிராக நடிகை காயத்ரி சாய்நாத்(55) என்பவர் பாலியல் குற்றச்சாட்டு கூறினார்.

நடிகையின் கணவர் வெளிநாட்டில் இறந்தது குறித்து பிரகாஷ் எம் ஸ்வாமி புலனாய்வு கட்டுரை வெளியிட்டதால் இருவருக்கும் இடையே  கடும் மோதல் ஏற்பட்டது.


எனினும் இதையடுத்து தன் சமூக வலைதளத்தில் பிரகாஷ் எம் ஸ்வாமிக்கு எதிராக நடிகை காய்த்ரி சாய்நாத் கருத்துகளை பதிவிட்டதோடு கொலை மிரட்டலும் விடுத்தாக கூறப்படுகிறது. நடிகைக்கு எதிராக பத்திரிகையாளர் அளித்த புகாரில் பட்டினப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.மேலும்  இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகை முன் ஜாமின் பெற்றார்.


இதன் பின் சமூக வலைதளத்தில் பத்திரிகையாளருக்கெதிராக அவதுாறு கருத்துகளை நடிகை தொடர்ந்து வெளியிட்டு வந்தார்.மேலும்  இது தொடர்பான வழக்கு கடந்த முறை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது சமூக வலைதளத்தில் தனக்கு எதிராக நடிகை பதிவிட்ட ஆபாசமான கருத்துகளை நீதிபதியிடம் பத்திரிகையாளர் சமர்ப்பித்தார். வழக்கு விசாரணையின்போது நடிகை ஆஜராகாமல் இருந்தார்.


மேலும் இந்த நிலையில் வழக்கு சைதாப்பேட்டை 23வது மாஜிஸ்திரேட் கெளதமன் விசாரணைக்கு வந்தது. அனைத்து ஆவணங்களை பார்த்த நீதிபதி ஜாமினில் வெளிவரக்கூடிய கைது வாரண்ட் பிறப்பித்து காய்த்ரி சாய்நாத்தை நவம்பர் 7ந் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார்.


Advertisement

Advertisement