• May 02 2024

அடுத்த வருடம் நடிகை ராகுல் பிரீத்தி சிங்கிற்கு திருமணமாம்- வெளிப்படையாகக் கூறிய அவரது சகோதரன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முக்கியமான நடிகையாக வலம் வருபவர் தான் ராகுல் ப்ரீத்தி சிங்.இவர் தடையற தாக்க என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகினார். 

இதனைத் தொடர்ந்து என்னமோ ஏதோ தீரன் அதிகாரம் ஒன்று, தேவ்  என் ஜி கே எனப் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இது தவிர தற்பொழுது கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்திலும் சிவகார்த்திகேயனின் அயலான் படத்திலும் நடித்து வருகின்றார்.


இவர் பிரபல தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானி என்பவரின் படங்களில் தொடர்ந்து நடித்து வருவதோடு அவருடன்  ரிலேஷன்ஷிப்பிலும் இருக்கிறார் என்பதும் ஏற்கனவே வெளியான செய்தி தான்.இந்த நிலையில் பாலிவூட்டில் அடுத்ததாக எதிர்பார்க்கப்படுவது இவர்கள் இருவரின் திருமணம் தான்.


 இதுகுறித்து அவர்கள் இருவரும் எதுவும் வாய் திறக்காத நிலையில், ராகுல் ப்ரீத்தி சிங்கின் சகோதரர் இதுபற்றி கூறும்போது, ‛‛எந்த ஒரு காதல் உறவுக்கும் இனிமையான முடிவு என்பது திருமணம் தான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. 2023ல் அவர்கள் திருமணம் நடைபெற வாய்ப்பு இருக்கிறது. அதேசமயம் அது எப்போது என்பதை உரிய நேரம் வரும்போது ராகுல் பிரீத்தி சிங் தான் அறிவிப்பார்” என்று அவர் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement