• May 10 2024

ஜி.பி முத்துவோடு எப்படியும் விளையாடலாம்- திடீரென புகழாரம் சூட்டிய கமல்- ஓ இது தான் விஷயமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டு மக்களால் அதிகம் விரும்பிப்பார்க்கப்படும் ஷோ தான் பிக்பாஸ் சீசன்6. இந்த நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரம் கடந்த நிலையில் அடுத்து யாருக்கிடையில் மோதல் வரப்போகின்றது. யார் யாரெல்லாம் நண்பர்களாக இருக்கப் போகின்றார்கள் என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்களிடம் அதிகமாக காணப்படுகின்றது.

இந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே காமெடியனான அமுதவாணன் இருப்பதால் காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் நகர்ந்து கொண்டே செல்கின்றது.தற்பொழுது மைனா நந்தினியும் களம் இளங்கியுள்ளதால் வீடு இனிமேல் கலகலப்பாக இருக்கும் என்று ரசிகர்களால் நம்பப்படுகின்றது.


இந்த நிலையில் வார இறுதியில் நடிகர் கமல்ஹாசன், பிக்பாஸ் போட்டியாளர்களிடையே பேசினார்.இது தவிர ஜி.பி முத்துவோடு அடிக்கடி காமெடியாகவும் பேசி வருகின்றார். இது பார்ப்பதற்கு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

அந்த வகையில் நேற்று  ஜிபி முத்துவுக்கு ஒரு போஸ்ட் பாக்ஸை அனுப்பி, அவருக்கு வந்ததாக சில கலகலப்பான லெட்டரை படிக்கும் நிகழ்வு நடந்த்து. எல்லாவற்றையும் தன் பாணியில் ஜிபி முத்து கையாண்டார். இதன் முடிவில் பேசிய கமல், ஜிபி முத்துவை தனக்கு பிடிக்கும் என்றும், அவர் ஒரு பரந்து விரிந்த களம் என்றும், அவருடன் எப்படியும் விளையாடலாம் என்றும் புகழாரம் சூட்டினார்.


இதனால் ஜ.பி முத்து ரசிகர்கள் செம குஷியில் இருப்பதுடன் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement

Advertisement