• May 05 2024

திடீரென உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ஜி.பி முத்து- பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகின்றாரா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய மொழிகளில் மிகப் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது தமிழில் ஆறாவது சீசனை தொட்டுள்ளது. எல்லா சீசன்களையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது 20 போட்டியாளர்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது பிக் பாஸ் சீசன் 6.

இந்த நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக பங்குபற்றி இருப்பவர் தான் ஜி.பி முத்து.இவர் இல்லை என்றால் இந்த சீசனே இல்லை என்ற அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்து விட்டார்.ஜிபி முத்துவை எதிர்த்து பேசி விட்டார் என்கிற ஒரே காரணத்திற்காக தனலட்சுமியை வீட்டை விட்டே வெளியேற்ற வேண்டும் என ஜிபி முத்து ஆர்மி பொங்கினர்.


மேலும் ரசிகர்கள் அவருக்கு முருங்கைக்காய் மற்றும் லெட்டர் போன்றவற்றையும் அனுப்பி அவரை குஷிப்படுத்தினார்கள். இந்த நிகழ்வு ரசிகர்களையும் கவர்ந்திருந்தது. இது தவிர கமல் சேரும் ஜி.பி முத்துவை தனக்கு பிடிக்கும் என பாராட்டி இருந்தார்.

இந்த நிலையில் நேற்றைய தினம் ஜி.பி முத்துவிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டள்ளது. கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவருக்கு சக போட்டியாளரான ரச்சிதா மாத்திரை கொடுத்து உதவி செய்தார்.


இதனை அடுத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். மேலும் தற்பொழுது வைரஸ் காய்ச்சல் பரவி வருவதால் சக போட்டியாளர்களுக்கு பரவி விடக் கூடாது என்பதால் இவர் வீட்டிலிருந்து வெளியேற்றப்படலாம் எனவும் புதிய தகவல் வெளியாகியுள்ளதைக் காணலாம்


Advertisement

Advertisement

Advertisement