• May 08 2024

நாம் ஏறிவந்த ஏணியை மறக்கக் கூடாது- பழசை மறந்த இந்துஜாவுக்கு பதிலடி கொடுத்த நடிகர் ஆர்.கே சுரேஷ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இயக்குநர் ரத்தன குமார் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் தான் மேயாத மான். இத்திரைப்படத்தில் நடிகர் வைபவ் கதாநாயகனாகவும் ப்ரியா பவானி ஷங்கர் கதாநாயகியாகவும் நடித்திருந்தனர்.

இதில் வைபவின் தங்கையாக நடித்திருந்தவர் தான் இந்துஜா.இப்படத்தைத் தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யின் பிகில் தனுஷ் நடிப்பில் இறுதியாக வெளியாகிய நானே வருவேன் ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.அதிலும் பிகில் திரைப்படம் இவருக்கு நல்லதொரு புகழை பெற்றுக் கொடுத்தது.


இதனையடுத்து பல முன்னணி இயக்குநர்கள் இந்துஜா அணுகி வருகிறார்கள். இந்நிலையில் சமீபகாலமாக உடல் எடை அதிகமாகிக் காணப்பட்ட இந்துஜா இப்போது ஒல்லியான தோற்றத்துக்கு மாறி இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட அது கவனம் பெற்றுள்ளது.

ஆனால் மேயாத மான் படத்துக்கு முன்பாகவே அவர் நடித்த திரைப்படம் பில்லா பாண்டி. சமீபத்தில் இந்துஜா அளித்த ஒரு நேர்காணலில் தான் நடித்ததிலேயே மோசமான படம் பில்லா பாண்டிதான் எனக் கூறியிருந்தார். இது குறித்து பேசியுள்ள பில்லா பாண்டி பட கதாநாயகன் ஆர் கே சுரேஷ் “நான்தான் அவரை எங்கள் நிறுவனத்தின் நான்கு படங்களுக்கு ஒப்பந்தம் செய்தேன். நாம் எந்த இடத்தில் இருந்து வந்தோமோ அதை மறந்துவிடக் கூடாது. நாம் ஏறிவந்த ஏணியை மறக்கக் கூடாது” என ஆதங்கத்தை வெளிப்படுத்தி பேசியுள்ளார்.

இஇவரின் இந்த கருத்திற்கு ரசிகர்கள் பலரும் தமது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். மேலும் ஆர்.கே சுரேஷ் சமீபகாலமான நெக்கட்டிவ் ரோல்களில் நடித்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement