• Jan 19 2025

Breaking news:- நடிகர் விஜய்க்கு இலங்கை அரசால் ஆபத்து இருக்கு... வெளியான அதிர்ச்சித் தகவல்...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் இலங்கைக்கு வருகை தருவதால் அவருக்கு இலங்கை அரசினால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பிரபல இந்திய சினிமா பத்திரிகையாளர் அந்தணன் தெரிவித்திருந்த நிலையில் தற்போது குறித்த செய்தியானது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடிக்கும் புதிய படத்திற்கான படிப்பிடிப்பு இலங்கையில் நடக்கவுள்ள நிலையில் விஜய்க்கு இலங்கையால் ஆபத்து வந்துவிட்டதாக பிரபல சினிமா பத்திரிகையாளர் அந்தணன் தெரிவித்திருக்கிறார்.  


ஏற்கனவே வெங்கட் பிரபு வேறு ஒரு படத்தின் படப்பிடிப்புக்காக இலங்கைக்கு வருவதாக இருந்தார். ஆனால் ஈழத் தமிழர்கள் அதற்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்தோம். இதனையடுத்து அந்த முடிவை அவர் கைவிட்டார். அவரும் முத்தையா முரளிதரனும் நெருங்கிய நண்பர்கள். நாங்களும், ஈழத் தமிழர்களும் நெருக்கமாக இருக்கிறோம் என்ற போலி உணர்வை உலகத்திடம் உணர்த்த முத்தையா முரளிதரனை வைத்தே இதனை ஏற்பாடு செய்திருக்கிறது.


இப்போது விஜய்யை அழைத்துக்கொண்டு வெங்கட் பிரபு இலங்கைக்கு வந்து GOAT படப்பிடிப்பை நடத்துவதாகவும் முக்கியமாக தமிழர்கள் இருக்கும் பகுதியில் நடந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இது படப்பிடிப்பின்போது நின்றால் பரவாயில்லை. மாறாக விஜய்யுடன் இலங்கை அரசை சேர்ந்தவர்கள் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் வேலை நடக்கும். அது முத்தையா முரளிதரன் மூலமாகக்கூட நடக்கலாம்.


இன்று உலகம் முழுவதும் விஜய்க்கு மார்க்கெட் இருக்கிறது. அதனால்தான் அவரது படங்கள் இன்று உலகம் முழுவதும் யா விஜய்க்கு மார்க்கெட் இருக்கிறது. அதனால்தான் அவரது படங்கள்  200 கோடி ரூபாவை அசால்ட் டாக வசூலிக்கின்றது.


அதுமட்டுமின்றி அவர் அரசியலுக்கு வரும் எண்ணத்திலும்  இருக்கிறார். சூழல் இப்படி இருக்க இலங்கை அரச தரப்பினர் விஜய்யுடன் புகைப்படம் எடுத்துக்  கொண்டு அது வெளியானால்  ஈழ தமிழர்களை பகைத்துக்கொள்ளும்படி ஆகிவிடும். மேலும்  அவரது அரசியல் வருகைக்கும் சிக்கலை ஏற்படுத்தலாம். இப்படி அவருக்கு ஆபத்து இருக்கிறது. ஈழ இதனை வெங்கட் பிரபுவே ஏற்படுத்திக்கொடுக்கிறார் என அவர் தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement