• Mar 27 2023

“அமிதாப் பச்சன் வீட்டில் வெடிகுண்டு..” வெளியான அதிர்ச்சி தகவல்..நடந்தது என்ன..?

Aishu / 3 weeks ago

Advertisement

Listen News!

மும்பையில் உள்ள அமிதாப் பச்சனின் பங்களா அருகே வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நாக்பூர் போலீசாருக்கு தொலைபேசியில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எனினும் இதனை தொடர்ந்து நாக்பூர் போலீசார் உடனடியாக மும்பை காவல்துறையினரை எச்சரித்தனர், மும்பை போலீசார் வெடிகுண்டு குழுவுடன் சென்று அமிதாப் பச்சன் வீட்டை சோதனை செய்தனர். ஆனால் தேடுதல் வேட்டையில் எதுவும்  அங்கு கிடைக்கவில்லை.

அத்தோடு அந்த தொலைபேசி அழைப்பில், 25 பேர் ஆயுதங்களுடன் மும்பையில் பயங்கரவாத தாக்குதல் நடத்த வந்ததாகவும் தெரிவித்துள்ளனர். அமிதாப் பச்சன் மட்டுமின்றி நடிகர் தர்மேந்திரா வீட்டிலும் வெடிகுண்டு இருப்பதாக கூறியுள்ளனர். 

இதனையடுத்து இரண்டு நடிகர்களின் வடு உள்ள காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் சோதனையில் வெடிகுண்டுவில்லை. அந்த அழைப்பு போலியானது எனவும் உறுதியானது.




Advertisement

Advertisement

Advertisement