• Mar 28 2023

நேரு ஸ்டேடியத்தில் நடிகை ஷாலினிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பாலிவுட் பிரபலம்!

Jo / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித்தின் மனைவி ஷாலினி, தன்னுடைய பிள்ளைகள் சற்று பெரிதாக வளர்ந்து விட்டதால்... அவ்வபோது அவர்களுடன் வெளியே வரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. 

இந்நிலையில் அஜித்தின் மனைவி ஷாலினி தன்னுடைய மகன் ஆத்விக்குடன் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த எப்.சி கால்பந்து போட்டியை பார்ப்பதற்காக வருகை தந்திருந்தார். 

இது குறித்த புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகி வைரலான நிலையில், ஐ எஸ் எல் என்று சொல்லப்படும் கால்பந்து போட்டியை ஷாலினி கண்டு ரசித்துக்கொண்டிருந்த போது, எப் சி அணியின் உரிமையாளரான பிரபல பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன்,ஷாலினி அஜித் போட்டியை காண வந்துள்ளதை அறிந்து, நேரடியாக அவரை சந்தித்து வரவேற்றார். 

மேலும் அவரின் மகனையும் வாழ்த்தினார். இது குறித்த கியூட் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.


Advertisement

Advertisement

Advertisement