• Apr 16 2024

பிரபல பாலிவூட் நடிகருடன் இணைந்த விஜய் சேதுபதி - ஃபார்ஸி' படத்தின் மிரட்டல் 1st லுக்!

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஜூனியர் ஆர்டிஸ்டாக நடித்து வந்தவர் தான் விஜய் சேதுபதி .அந்த வகையில்   லவ் பேர்ட்ஸ், கோகுலத்தில் சீதை, புதுப்பேட்டை, எம். குமரன் S/o மகாலெட்சுமி, லீ, வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல, பலே பாண்டியா ஆகிய படங்களில் ஜூனியர் ஆர்டிஸ்டாக நடித்திருந்தார்.

அதனை அடுத்து தென்மேற்கு பருவக்காற்று,என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகினார்.இதன் பின்னர் பீட்ஸா, சூது கவ்வும், சுந்தர பாண்டியன், நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் ஆகிய படங்களின் மூலம் கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக மாறினார்.


அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வரும் இவர் கதாநாயகனாக மட்டுமல்லாது வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகின்றார்.

அந்த வகையில் இவரது நடிப்பில் அடுத்ததாக இடம் பொருள் ஏவல், யாதும் ஊரே யாவரும் கேளீர்,  விடுதலை, மும்பைக்கர், பிசாசு2, ஜவான் போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.இந்நிலையில் ஃபேமிலி மேன் வெப் சீரிஸ் மூலம் புகழ் பெற்ற இயக்குநர்களான ராஜ் & டிகே இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் Farzi வெப் சீரிஸின் முதல் லுக் போஸ்டர்கள் வெளியாகி உள்ளன. 


இந்த வெப் சீரிஸில் ஷாகித் கபூர், ராஸி கண்ணாவும் நடிக்கின்றனர்.அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் பெப்ரவரி மாதம் 10 ஆம் தேதி முதல் இந்த வெப் சீரிஸ் ஒளிபரப்பாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement