விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கின்றது. இன்னும் இரண்டு நாட்களில் டைட்டில் வின்னர் யார் என தெரிந்துவிடும்.
இதன் ஆரம்பத்தில், 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் ஒருவர் தான் நடிகை மாயா. இவர் ஒரு மேடை நாடக நடிகர். அத்துடன் மேடை நாடகங்களில் நடிப்பதில் அதிகம் ஆர்வம் கொண்டவர்.
மேலும், மாயா ஒரு சில படங்களில் நடித்து இருந்தாலும் இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபல படுத்திய படம் என்றால் அது கண்டிப்பாக கமல் நடித்த விக்ரம் திரைப்படம் தான். குறித்த படத்தில் சின்னதாக ரோலில் நடித்திருந்தாலும் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன்வசம் ஈர்த்துள்ளார் மாயா.

இதையடுத்து, பிக்பாஸ் வீட்டிலுள்ள மாயா அங்கு பல சர்ச்சைகளில் சிக்கியிருந்தாலும், மக்களை மகிழ்விப்பதில் கை தேர்ந்தவராக காணப்பட்டார்.
இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் மாயா ஹீரோயின் ஆகப்போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, கடந்த ஆண்டு வெளியான மாவீரன், வெந்து தணிந்தது காடு, ஜவான் ஆகிய படங்களில் ஆக்ஷன் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த Yannick Ben என்பவரின் இயக்கத்தில் புதிய படம் ஒன்று உருவாகவுள்ளதாம்.
குறித்த படத்தில் மாயா ஹீரோயினாக அறிமுகமாக போகிறார் எனவும், இது தொடர்பில் விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
                             
                            
                            
                            
                                                    
                                                    
                                            
                                            
                                            
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                
                
                
                
                
Listen News!