• May 04 2024

கவர்ச்சியில் களை கட்டும் பிக்பாஸ் மதுமிதா…வாயடைத்துப் போன ரசிகர்கள்

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 5 இல் போட்டியாளராக கலந்துகொண்டு மக்கள் மத்தியில் வரவேற்கத்தக்க விமர்சனங்களை பெற்ற ஒருவரே மதுமிதா. இவர் ஜேர்மனியில் இருந்து வந்து இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழைந்தவர்கள் அங்கு ஒரு நாள் இருந்தாலும் சரி, நூறு நாட்கள் இருந்தாலும் சரி மிக எளிதாக மக்கள் மத்தியில் பிரபல்யமாகி விடுவார்கள். அதேபோன்று இவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதி வரை வரவில்லை என்றாலும் இவருடைய பேச்சின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அதிகம் ரீச் ஆனார். அதுமட்டுமல்லாது அந்த சீசனில் பங்கேற்ற 15 இற்கும் மேற்பட்ட போட்டியாளர்களில் இவருக்கு தான் அதிகம் சம்பளம் என தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த நாள் தொடக்கம் இன்றுவரை சமூக வலைத்தளங்களில் பிஸியாகவே இருந்து வருகின்றார். இவ்வாறாக சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் மதுமிதா தற்போது படு கவர்ச்சியான ஆடைகளை அணிந்து புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் மதுமிதா சமீபத்தில் கவர்ச்சியான உடையில் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகி வருகிறது. அப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அமைதியாக இருந்த நம்ம மதுமிதாவா இது என வாயடைத்துப் போயுள்ளனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement